கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: தேர்தல் அலுவலகம் திறப்பை ஒத்தி வைத்த என்.ஆர்.காங்கிரஸ்

By செ.ஞானபிரகாஷ்

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லாத காரணத்தால் என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது புதுச்சேரியில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் அலுவலகம் ரெட்டியார்பாளையத்தில் உள்ளது. இங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு மக்களவைத் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அறிவித்தப்படி தேர்தல் அலுவலகம் திறக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்காமல் எப்படி தேர்தல் அலுவலகம் திறப்பது என்ற பிரச்சினை எழுந்தது. வழக்கம்போல் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தாமதமாகவே காலை 9.50 மணிக்கே கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் தேர்தல் அலுவலகம் திறக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக  கட்சியின் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. முதலில் அங்கிருந்த சாமி படங்களுக்கு பூஜையை ரங்கசாமி நடத்தினார்.

அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் ரங்கசாமி பேசுகையில், "ஆளும் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களவைத் தேர்தலுக்கான அப்பட்டமான அரசியல் நாடகம். மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே என்.ஆர்.காங்கிரஸ் கொள்கை. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே வேட்பாளர் தெரிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டு விட்டு புறப்பட்டு சென்றார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்