சிறிசேனாவை கொல்ல திட்டமிட்டதாக கைதான இந்தியர் விடுதலை

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசோனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடல் கொண்ட ஒலிப்பதிவினை கண்டியில் செய்தியாளர் சந்திப்பில் 'ஊழலுக்கு எதிரான படையணி' என்ற அமைப்பின் தலைவர் நாமல் குமார என்பவர் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பான இந்திய பிரஜையான கேரளாவைச் சேர்ந்த மர்செலி தாமஸ் என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை குற்றப் புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ''இந்திய உளவு அமைப்பான ‘ரா’ , என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால்,இந்தத் திட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சிறிசேனாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கானது, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மர்செலி தாமஸ் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டது.

நாடு திரும்புவதில் சிக்கல்

எனினும், இலங்கையில் விசா காலம் காலாவதியான பின்னரும், அனுமதியின்றி தங்கி இருந்த குற்றத்துக்காக மர்செலி தாமஸ் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். அவர் நாடு திரும்புவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்