சிவராத்திரி விழாவில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

By செய்திப்பிரிவு

திருவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார்.

திருவில்லிபுத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளாக மகா சிவராத்திரி அன்று நள்ளிரவில் விறகு அடுப்பில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 86 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார். அப்போது கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், கணேசன், இருளப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கூடியிருந்து பார்த்தனர். மகா சிவராத்திரி தினத்தில் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 48 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக அவர் விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

45 mins ago

க்ரைம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

39 mins ago

தொழில்நுட்பம்

21 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்