திமுக கூட்டணி: இடதுசாரிகள், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை?

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளை திமுக வழங்கியது. ஆரம்பத்தில் தேமுதிக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தேமுதிக இழுத்தடிக்கவே கூட்டணிகட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணிப்பேச்சு வார்த்தையை முடித்துவைத்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் நேற்றே முடிவு செய்யப்பட்டது. அந்த கட்சிக்கு தென்காசி மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அறிவாலயத்துக்கு சென்று துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்.அப்போது ம.தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட வைகோ அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கூட்டணியில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கலம்எ என கூறப்படுகிறது.

இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளும் இன்று இறுதி செய்யப்பட்டன. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. ஒதுக்கப்படும் தொகுதி குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எனினும். அக்கட்சிக்கு மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒரு சில தொகுதிகள் குறித்த முடிவு மட்டும் எட்டப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

52 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்