கோவை துடியலூர் அருகே பலியான 7 வயது சிறுமி: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

By செய்திப்பிரிவு

கோவை அருகே மாயமான சிறுமி, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் புதூரை சேர்ந்தவரின் 7 வயது மகள் திப்பனூர் அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானார். மறு நாள் காலை சிறுமி சடலமாக மீட்கப் பட்டார். சிறுமியின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் முழு விவரம் நேற்று வெளியானது.

அதில், ‘‘சிறுமி ஒன்றுக்கும் மேற் பட்ட நபர்களால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், சிறுமி யின் வாயையும், மூக்கையும் துணியால் அழுத்தியும், கழுத்தில் கயிறுபோல் உள்ள பொருளை வைத்து இறுக் கியும் உள்ளனர். அதனால் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிறுமி கொடூர மாக கொலை செய்யப்பட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தடாகம் போலீஸார், போக்சோ சட்டத்திலும் வழக்குப் பதிந் தனர். இதனால், இந்த வழக்கு துடியலூர் மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மேற்பார்வையில் துணை காவல் கண்காணிப்பாளர், 4 ஆய்வாளர் கள், 6 உதவி ஆய்வாளர்கள், போலீஸார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த தனிப்படையில் 2 கூடுதல் எஸ்பிக்கள், 4 ஆய்வாளர்கள் நேற்று மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

சிறுமி படித்த பள்ளிக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் உட்பட 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நோட்டீஸ் வெளியீடு

விசாரணை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரிக்கப்பட்டு வருகி றது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என போலீஸார் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அந்த நோட்டீஸில், ‘‘சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியம் காக்கப்படும் என வாசகங்கள் பதிவிட்டு, காவல் துணை கண்காணிப்பாளர் 94981-04407, மகளிர் காவல் ஆய்வாளர் மீனாம்பிகை 94431-22744, காவல் ஆய்வாளர் 94981-73353, பெண் உதவி ஆய்வாளர்கள் 94981-74226, 94981-74227, துடியலூர் காவல் நிலையம் 94981-01198, 0422-2642990, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் 94981-01202, 0422-2648168 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் என்ன தண்டனை ?

இது குறித்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பாண்டிராஜ் கூறியதாவது: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பாற்ற கடந்த 2012-ம் ஆண்டு 'பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்' (protection of children from sexual offences act) எனப்படும் போக்சோ சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் உட்பிரிவுகள்படி குற்றங்களுக்கு தகுந்தவாறு தண்டனைகள் வழங்கப்படும். அதிகபட்சம் தூக்கு தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உடந்தையாக இருப்பதும் குற்றமே. அவர்களுக்கும் குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்