ரயில்களில் நடக்கும் திருட்டு, விபத்துகளை தடுக்க ‘ரூட் மேப்பிங்’ புதிய திட்டம் அறிமுகம்: டிஐஜி பாலகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

ரயில்களில் திருட்டு, விபத்துகளைத் தடுக்க ‘ரூட் மேப்பிங்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ரயில்வே காவல் துறை டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகள், திருட்டு சம்பவங்களின் விவரத்தை சேகரித்து வருகிறோம். வரும் காலங்களில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளையும் திருட்டு சம்பவங்களையும் தடுக்க ‘ரூட் மேப்பிங்’ என்ற புதிய திட்டத்தை தமிழக ரயில்வே காவல் துறையினர் செயல்படுத்த உள்ளனர். தமிழகத்தில் 2017 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,945 பேர் ரயில் விபத்துகளில் பலியாகிஉள்ளனர். இதில் 299 பேர் பெண்கள். 41 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள னர். அதுபோல, 151 திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்தரயில் விபத்துகள், எந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது,உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து விபத்து,திருட்டு போன்ற அசம்பாவிதங் களைத் தடுக்க இந்த திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது. விபத்துநடந்த இடம் மற்றும் திருட்டுசம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள்‘மேப்பிங் பாயின்ட்’ என்றுகுறிப்பிட்டு அடையாளப்படுத் தப்படும். எந்த இடத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ அங்கு எச்சரிக்கை அறிவிப்புகள், தடுப்புக் கட்டைகள் போன்றவை அமைக்கப்படும். திருட்டைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரயில்வே காவல் துறையின் கீழ் 48 காவல் நிலையங்களில் 1,500 பேர் பணியில் உள்ளனர். அவர்களை வைத்து, இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்