ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பாஜக பயன்படுத்துகிறது: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பாஜக பயன்படுத்து கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார் பில் கரூர் மக்களவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் மாவட்டத் தலை வர் ஆர்.சின்னசாமி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில், சஞ்சய்தத் பேசியபோது, "தங்கள் நலனுக்காக மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு உடனடியாக அஞ்சலி செலுத்தாமல் மோடி அவமரியாதை செய்துவிட்டார்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

புல்வாமா தீவிரவாத தாக்குத லில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசி யலுக்கு பாஜக பயன்படுத்துகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி தமிழகத்துக்கு எதிராகவே செயல் பட்டு வந்துள்ளார். தமிழக அரசின் ரிமோட் மோடியிடம் உள்ளது. தங்களின் தவறுகளை மறைப்ப தற்காகவே, பரஸ்பரம் குறை கூறி வந்த அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத் துள்ளன.

தீவிரவாதிகள் மீதான தாக்குதல் கர்நாடகாவில் பாஜகவுக்கு 22 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றுத்தரும். இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும், மோடி பிரதமராவார் என எடியூரப்பா கூறியுள்ளார். இதை மோடியோ, அமித்ஷாவோ கண்டிக்கவில்லை. துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவதை இது உறுதி செய்கிறது என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ஜோதிமணி, காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமார மங்கலம், முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ வெள்ளி யணை ராமநாதன் உள்ளிட் டோர் இதில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்