பணப் பரிவர்த்தனை தனியார் செயலிகளில் ரயில் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: புதிய நுழைவு கட்டண முறை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பண பரிவர்த்தனை தனியார் செயலிகள் தொடங்கியுள்ளன. இதனால், கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 வரையில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மக்களிடம் செல்போன் பயன் பாடு அதிகரித்துள்ள நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இதே போல், ஐஆர்சிடிசி செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சி டிசி செயலி மூலம் அல்லது மூன்றாம் பங்குதாரார் செயலிகள் மூலம் பெற்று வருகின்றனர். இந்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி-யில் பதிவுசெய்து பெறும் வாடிக்கை யாளர்களிடம் பணப் பரிவர்த் தனை செய்ய கட்டணம் வசூலிக் கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது, பரிவர்த்தனை கட்ட ணத்தை ரூ.10 முதல் ரூ.15 வரை யில் வசூலிக்கத் தொடங்கி விட்டனர்.

ரூ.10 முதல் ரூ.15 வரை

பயணிகள் சிலர் கூறும்போது, “ஐஆர்சிடிசி செயலி டிக்கெட் பெறுவதற்கான கட்டணத்துடன் பரிவர்த்தனை கூடுதல் தொகையை எந்த செயலி நிறுவனங்களும் வசூலிக்காமல் இருந்தன. ஆனால், தற்போது பெரும்பாலான பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையில் பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்கத் தொடங்கி விட்டன.

மேலும், வங்கிகள் மூலம் நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை மாறி, தனியார் செயலிகள் மூலம் கட்டணத்தை வசூலிக்கும் முறைக்கு ஐஆர்சிடிசி முக்கியத்து வம் அளித்து வருகிறது.

முறைகேடு நடக்க வாய்ப்பு

இதனால், வாடிக்கையாளர் களின் வங்கி கணக்கில் முறை கேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதை மாற்ற வேண்டும். கூடுதல் பரிவர்த்தனை கட்டணம் இன்றி மக்கள், வங்கிகளின் ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்தும் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி னர்.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகளுக்கு வீண் அலைச்சல் இன்றி எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்யவே தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சில தனியார் நிறுவனங்களின் பேமெண்ட் கேட்வே வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பல நிறுவனங்கள் பணப் பரிவர்த் தனைக்கு கட்டணம் வசூலிப்ப தில்லை. ஆனால், சிலர் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

மக்கள் இனி இந்த கட்டணத்தை செலுத்தாமல் இருக்கவும், ஐஆர்சி டிசி வழியாகவும் கட்டணம் செலுத்தவும் வசதியாக ‘ஐ’ எனும் புதிய நுழைவு கட்டண முறை (பேமெண்ட் கேட்வே) தொடங்க வுள்ளோம். இது மக்களுக்கு மிக வும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.வங்கிகள் மூலம் நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை மாறி, தனியார் செயலிகள் மூலம் கட்டணத்தை வசூலிக்கும் முறைக்கு ஐஆர்சிடிசி முக்கியத்துவம் அளித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

ஆன்மிகம்

27 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்