தமிழகத்தில் 2020-க்குள் மதுபானக் கடைகளை மூடக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2020-க்குள் அனைத்து மதுபான கடைகளையும் மூடக்கோரிய வழக்கில், மதுபான தொழிற்சாலைகள், அங்கிருந்து வாங்கப்படும் மதுபானங்களின் அளவு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இருப்பினும் டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு நடைமுறைப்படுத்தவில்லை. தேர்தல் அறிவிக்கையில் கூறியபடி 2020-க்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (புதன் கிழமை) விசாரணைக்குவந்தது.

அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? இந்த தொழிற்சாலைகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வளவு மதுபானம், எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது? விற்கப்படுகிறது? iஎன்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

37 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

51 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்