அரும்பாக்கம் பகுதியில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்பு ரவுடி கொலை: கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

By செய்திப்பிரிவு

அரும்பாக்கத்தில் பொதுமக்கள் முன்பு நடுரோட்டில் ஓடவிட்டு ரவுடியை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ண மூர்த்தி. பிரபல ரவுடியான இவர் எண்ணூரில் வசித்து வந்தார். நேற்று காலையில் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் பின்புறம் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணமூர்த்தியை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அந்த கும்பல் அவரை நடுரோட்டில் ஓடவிட்டு சரமாரியாக வெட்டிக் கொன்றது. காலை 11 மணி அளவில் பொதுமக்கள் கண்முன்னால் இந்தக் கொலை நடந் தது. கிருஷ்ணமூர்த்தி கொலை ஆனதை பார்த்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சி யடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் குணசேகரன், அரும் பாக்கம் காவல் ஆய்வாளர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எண்ணூர் வீட்டில் இருந்து கிருஷ்ணமூர்த்தி தனது மினி வேனில் அரும்பாக்கம் வந்துள் ளார். வேனை அவரே ஓட்டி வந் துள்ளார். எண்ணூரில் இருந்தே கொலைகார கும்பல் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தியை பின்தொடர்ந்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள் ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி மீது கொலை, கொலை முயற்சி என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பி னும் பழைய தகராறுகளால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கிருஷ்ணமூர்த்தியை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்