கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வசதி: புதிய சேவையை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம்

By ப.முரளிதரன்

பிஎஸ்என்எல் நிறுவனம் வீடு களுக்கு உள்ளூர் கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும் புதிய திட் டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பிராட்பேண்டுக்கான கட்டணத்தை தங்கள் வீட்டில் இருந்தபடியே கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் செலுத்தலாம். அத்துடன், ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவர்களிடம் புகார் அளித்து உடனடியாக சரி செய்யலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவை களை வழங்கி வருகிறது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பிராட் பேண்ட் இணைப்பு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள் தலைமை பொதுமேலாளர் வி. ராஜூ ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது 3.50 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், பிராட்பேண்ட் சேவையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக, பாரத் ஃபைபர் சேவை என்ற திட்டத்தின் கீழ், ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் எனப்படும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் வீடு களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மேலும் ஒரு சிறப்பம்ச மாக, இந்த இணைப்பை அந்தந்தப் பகுதியில் உள்ள கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் மூலம் வாடிக்கையாளர் களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழகம் முழுவதும் இதுவரை 110 கேபிள் டிவி ஆப ரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள தொலைபேசி இணைப்பகம் அல்லது அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கட் டுப்பாட்டு அறை வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கப்படும்.

அங்கிருந்து பிராட்பேண்ட் இணைப்பைப் பெறும் வாடிக்கை யாளர்களின் வீடுகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கேபிள்களை கொண்டு சென்று இணைப்பு கொடுப்பர். ஆப்டிக்கல் லைன் டெர் மினல் என்ற கருவியின் மூலம் இந்த இணைப்பை அவர்கள் கொடுப் பர். இதன் மூலம், வாடிக்கை யாளர்களுக்கு விரைவான சேவை கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் இந்தக் கேபிளில் ஏதேனும் பழுது ஏற் பட்டால் அது குறித்து, அவர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கத் தேவையில்லை. கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் தெரிவித்தால், அவர்களே உடனடியாக வந்து சம்பந்தப்பட்ட பழுதை சரி செய்து கொடுப்பர். இதன் மூலம், ஆபரேட்டர்களுக்கு ஒரு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்த பிராட்பேண்ட் சேவை மூலம், அதிவேக திறன் கொண்ட இணையதள சேவையும் பெற முடியும். அதிகபட்சமாக 150 எம்பிபிஎஸ் (mbps) திறன் வேகத் தில் இணையதள சேவையைப் பெற முடியும். அத்துடன், இந்த பிராட்பேண்ட் சேவையில் கூடுதலாக தொலைபேசி குரல் சேவையும் (வாய்ஸ் கால்) வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

20 mins ago

க்ரைம்

14 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

29 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்