தமிழகத்தில் ஊழல் கண்காணிப்புப் பிரிவுகள் ஒழுங்காகச் செயல்பட்டால் 80% பிரச்சினைகள் தீர்ந்து விடும்: சென்னை உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவை கூண்டோடு கலைக்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

 

மாநகராட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு மேற்கொண்டுள்ளது.

 

சென்னை ஷெனாய் நகரில் உள்ள ரஷ்மி என்பவர் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்ரமித்து வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை அகற்றக்கோரி மாநகராட்சி புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 2018ம் ஆண்டு அளித்தத் தீர்ப்பில் சென்னை மாநகராட்சியில் உள்ள சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் கண்காணிப்புப் பிரிவு செயல்படவில்லை, அந்தப் பிரிவை கலைத்து விட்டு அதற்குப் பதிலாக டிஜிபியுடன் கலந்தாலோசித்து விட்டு டிஜிபியுடன் ஆலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி மேல்முறையீட்டு மனு செய்திருந்தது, இதன்  மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் நடந்த போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணம் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு தனிநீதிபதி பிறப்பித்த 2 உத்தரவுகளுக்கு மட்டும் அதாவது லஞ்ச ஒழிப்புத்துறையைக் கலைக்க வேண்டும் என்ற உத்தரவு மற்றும் டிஜிபியுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற இந்த 2 உத்தரவுகளுக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

மேலும் மற்ற உத்தரவுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.  இந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தனி நீதிபதி உத்தரவிட்ட படி அந்த ஜெனரேட்டர் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது, மீதமுள்ள பல உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

சென்னை மாநகரத்தைப் பொறுத்த மட்டும் முதல் நிலை, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஊழியர்கள் நிலைகளில் மொத்தமாக  6,590 காலியிடங்கள் இருப்பதாகவும் இவற்றை நேரடி நியமனத்தில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார், இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறையை நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் நடத்த வேண்டும் என்று மாநகராட்சிக்குப் பரிந்துரைத்தனர். எனினும் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் முதன்மைச் செயலாளர் 2 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் இதற்கு தேர்வு நடைமுறைகள் எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

தமிழகத்தில் ஊழல் கண்காணிப்புப் பிரிவுகள் ஒழுங்காகச் செயல்பட்டால் 80% பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழல் கண்காணிப்புப் பிரிவுகளில் பணிபுரிபவர்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் இதனை முறையாகக் கண்காணிக்க வேண்டும், அந்தந்தப் பிரிவுகளில் இருப்பவர்கள் மீது எழும் புகார்களை விசாரித்து அதிகாரிகள் உடனடியாக அதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஊழல் கண்காணிப்புப் பிரிவினரைக் கண்காணிப்பதற்கு இந்த நடைமுறை மட்டும் போதுமானது எனத் தெரிவித்தனர்.

 

இந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவை கூண்டோடு கலைக்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

40 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்