திருப்பூர் வரும் பிரதமருக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி

By செய்திப்பிரிவு

திருப்பூர் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து, வைகோ தலைமையில் நாளை (பிப்.10) கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி நாளை (பிப்.10) திருப்பூர் வர உள்ளார். தமிழகத்தை புறக்கணிப்பதால் அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்திருக்கிறோம். கருப்புக்கொடி காட்டுவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்ட உள்ளோம் என்றார்.

வானதி சீனிவாசன் எதிர்ப்பு: ஜனநாயக நாட்டில் மாற்று கருத்துகளை முன்வைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதை நாகரிகமாக முன்வைக்க வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்புத் துறை கண்காட்சியை தொடங்கி வைக்க வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுகின்றனர்.  தங்களது இருப்பை வெளிப்படுத்தவே, இதுபோன்று செயல்படுகின்றனர். கருப்புக்கொடி காட்டுவோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டவில்லை. தமிழக நலனுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுகிறீர்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்