‘இந்து தமிழ்’ நாளிதழில் முன்கூட்டியே வெளியான செய்தியின்படி அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது

By செய்திப்பிரிவு

அதிமுகவுடன் பாமக கூட்டணி என ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தி உண்மை என்று இப்போது உறுதியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகு திகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் என்பதற்கான ஒப் பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 5-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழின் 12-ம் பக்கத்தில் மக்கள வைத் தேர்தல் கூட்டணி குறித்து - ‘அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தகவல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. 4-ம் தேதி சென்னை யில் கூட்டணி தொடர்பான கேள் விக்கு அன்புமணியிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலின் அடிப்படையிலேயே, ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

செய்தி வெளியான அன்றைய தினம் தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அன்புமணி அளித்த பேட்டியில், “கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், எங்களைப் பற்றிய பொய்யான செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஊடகங்கள் புரோக்கர் வேலை பார்க்கின்றன. அவர்கள் விருப்பத்தை எங்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்” என்றெல்லாம் கடுமையாக குற்றம் சாட்டினார்.

‘’திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணியே கிடையாது என்று இதுவரை நீங்கள் சொல்லி வந்தி ருக்கும் நிலைப்பாடே இனியும் தொடருமா?” என்ற இன்னொரு கேள்விக்கு, பாமக நிர்வாகிகள் யாருமே தெளிவான பதில் தர மறுத்துவந்த நிலையில்தான், தற்போது அதிமுக-வுடன் பாமக-வின் ரகசிய பேச்சுவார்த்தை வெற்றி பெற்று கூட்டணி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாமக-வின் நிலைப்பாட்டால் அதிமுக - பாமக ஆகிய இரு கட்சிகளில் யாருக்கு அதிக பலன் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதங்கள் தொடங்கி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்