வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கம்: சென்னையில் வலம் வரும் மாநகராட்சி விழிப்புணர்வு வாகனம்

By செய்திப்பிரிவு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களைக் கொண்டு செல்லும் விழிப்புணர்வு வாகனங்களை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹு தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2019- ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ((EVM), வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (VVPAT)  கொண்டு செல்லும் விழிப்புணர்வு வாகனங்களை இன்று மத்திய வட்டார அலுவலகத்திலிருந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகிய இருவரும்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் அண்ணா நகர் மண்டலம், ஷெனாய் நகரில் உள்ள பி.எம்.சுந்தரவதனம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவினைப் பார்வையிட்டு, அங்குள்ள வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிக்கும் முறை குறித்தும் விளக்கி மாதிரி வாக்குப்பதிவினைத் தொடங்கி வைத்தார்கள்.

மேலும், வாக்குச்சாவடி மையத்தில் கூடியிருந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் 913 இடங்களில் உள்ளன.  வருகின்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 -ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்கள் உள்ள 913 அமைவிடங்களிலும் வாக்காளர்கள் மாதிரி வாக்கினை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ((EVM) செலுத்தி, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (VVPAT) மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் 1 முதல் நிலை செயல் விளக்க அலுவலர் (First Demo Officer), 1 இரண்டாம்நிலை செயல்விளக்க அலுவலர் (EVM & VVPAT), 2 அலுவலக உதவியாளர், 1 பாதுகாப்பு காவலர் என 5 நபர்கள் பணியில் இருப்பார்கள். இக்குழுக்கள் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 வாக்குச்சாவடி அமைவிடங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் (EVM & VVPAT) குறித்து செயல்முறை விளக்கத்தினையும், மாதிரி வாக்குப்பதிவினையும் நடத்தவுள்ளனர். 

ஒவ்வொரு மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 120 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு, பின்னர் அவை கணக்கிடப்பட்டு சரிபார்க்கப்படும். மேற்குறிப்பிட்ட செயல் முறை விளக்கங்கள் முடிந்தவுடன் தற்காலிக வாக்குப்பெட்டி பாதுகாப்பு இருப்பு அறையில் (Temporary strong room) இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், EVM & VVPAT இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், இந்த ஆண்டு 100 சதவீதம் வாக்களிக்கச் செய்திடும் வகையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விடுபடாமல் இருக்க கீழ்தளங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைத்தல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம் அமைத்தல், அதிக அளவில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இருப்பின் தனி வாக்குச்சாவடி அமைத்தல், அரசு ஏற்பாடு செய்யும் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறன் வாக்காளர்களை வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து வருதல் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதே அந்தந்தப் பகுதியிலுள்ள மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் விவரங்களை வாக்குச்சாவடி  அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் அவர்களுடைய மாற்றுத்திறன் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் அளிக்குமாறும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் படிவம்-6 அளிக்குமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இன்று தொடங்கும்  மாதிரி வாக்குப்பதிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எந்தவொரு வாக்குச்சாவடி இடமும் (Polling station locations)  விடுபடாத வகையில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

ஓடிடி களம்

34 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்