அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடை மாற்றத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனை செவிலியர் களின் சீருடை மாற்றத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் பதில ளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் செவிலியர்களுக்கு புதிய சீரு டையை அறிமுகம் செய்து தமிழக அரசு கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செவிலியர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘‘ நாங்கள் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளோம். எங்களைப் போன்ற 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கு வெள்ளை நிற அரைக்கை சட்டை யும், பேண்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றும் செவிலியர்களுக்கு வெள்ளை அரைக்கை சுடிதார் மற்றும் பேண்ட் ஆகியவற்றுடன் ஓவர்கோட் சீருடையாக வழங்கப் பட்டுள்ளது. செவிலியர்கள் அனை வரும் ஒரே பணியை செய்யும்போது அதில் 10 ஆண்டுக்கு மேல், 10 ஆண்டுக்கு கீழ் என பாரபட்சம் பார்ப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

எனவே செவிலியர்களுக்கான சீருடை மாற்றம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.செல் வம் ஆகியோர் ஆஜராகி, செவிலி யர்களுக்கான சீருடை மாற்றம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கக்கூடாது என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி, செவிலி யர் சீருடை மாற்றத்துக்கான அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, இதுதொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மருத்துவத்துறை இயக்கு நர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்