நீட் தேர்வுக்கு இலவச விரைவுப் பயிற்சி; சென்னை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நீட் போட்டித் தேர்வுக்கான இலவச விரைவுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும்‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக பள்ளி மாணவர்களை நீட், ஐஐடி, ஜெஇஇ போன்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்த இதுவே சரியான தருணம்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டணம் ஏதுமின்றி நீட் இலவசப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்  அனைவருக்கும் 'நீட்- 2019' போட்டித்தேர்வுக்கான இலவச விரைவுப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த உள்ளதாக தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளி சார்பில் 'நீட்- 2019' போட்டித்தேர்வுக்கான விரைவுப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 20 முதல் மே 5-ம் தேதி வரை 45 நாட்கள் தினமும் நடைபெற உள்ளது.  வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள் உடனடியாக 044-26430029, 8668038347  தொலைபேசி எண்களை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நீட் இலவசப் பயிற்சி தொடர்பான அறிமுக வகுப்பு பிப்ரவரி 17-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.  சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்துக்காகவே இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்