மூடுபனி நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் நிலவி வரும் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும், உள் தமிழக மாவட்டத்தில் மூடு பனி நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்ககடல்  பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது, ஆனால் அதனால் எந்த மாற்றமும் தமிழகத்தில் இல்லை.

நீலகிரி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும், அதே போல் உள் தமிழக மாவட்டங்களில் மூடுபனி அதிகம் இருக்கும். பனிப்பொழிவு குளிரின் தாக்கம் உதகையில் தொடர்ந்து சில தினங்களாக அதிகம் நிலவி வருகிறது, குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகையில் 3.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  மழை எங்கும் பதிவாகவில்லை. சென்னையை பொறுத்து வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும், அதிகபட்சமாக வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

10 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

18 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

24 mins ago

ஆன்மிகம்

34 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்