அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் திருமண நாளைக் கொண்டாடிய விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் உள்ளதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார்.

இதனிடையே, அவர் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதால், அவரது மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியப் பிரச்சினைகளில் கருத்துகளைக் கூறி வருகிறார்.

இந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபடியே கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின. மேலும், அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் 'அக்வாமேன்' திரைப்படம் பார்த்த புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை), அவர் தன் திருமண நாளையொட்டி மனைவியுடன் கேக் வெட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனும் உள்ளார்.

விஜயகாந்த் விரைவில் முழு நலம் பெற்று கட்சிப் பொறுப்புகளை பழைய உற்சாகத்துடன் கவனிப்பார் என, அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரன் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்