சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையொட்டி மாநில எல்லையில் 600 போலீஸார் குவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மாநில எல்லையில் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர், தேன்கனிக்கோட்டை வழியாக பெங்களூர் செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தற்கா லிக சோதனை சாவடிகள் அமைத் துள்ளனர். மேலும், அவ்வழியே தடுப்புகள் ஏற்படுத்தி, இன்று காலை முதல் பெங்களூர் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக் கப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

20 mins ago

வணிகம்

32 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்