பொங்கல் பண்டிகையை கொண்டாட பெண் ஒப்பந்த ஊழியர்களுக்கு சேலைகளை பரிசளித்த டாக்டர்கள்: சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்

By செய்திப்பிரிவு

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், பெண் ஒப்பந்த ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சேலை வாங்கிக் கொடுத்தனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 325 பெண் ஒப்பந்த ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த ஊழியர்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் தலைமையில் டாக்டர்கள், செவிலி யர்கள் ஊழியர்களுக்கு சேலை வழங்கினர். சேலையை பெற்றுக் கொண்ட சிலர் கண் கலங்கினர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு இலவ சமாக சேலை வழங்கியது பற்றி மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமாரிடம் கேட்ட போது, “இந்த ஊழியர்கள் குறை வான ஊதியம் பெறுகின்றனர். பொங்கள் பண்டிகைக்குக் கூட புதிய ஆடைகள் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், மருத்துவமனையில் பணிபுரியும் சக டாக்டர்களுடன் கலந்தாலோசித்து ஊழியர்களுக்கு புதிய ஆடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதன்படி சுமார் ரூ.1 லட்சம் நிதி திரட்டி 325 சேலைகள் வாங்கி கொடுத்திருக்கிறோம்” என்றார்.

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த ஊழியர்கள் பொங் கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட டாக்டர்கள் சேலை வாங்கி கொடுத்திருக்கும் நிகழ்வு, மற்ற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்