நெய் வாங்கியதில் ரூ.10 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

நெய் வாங்கியதில் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர் மீது செட்டிபாளையம் போலீ ஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (39). பால் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கோவை செட்டிபாளையம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.

அதில்,‘ ‘செட்டிபாளையத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்புக்கு நெய் வாங்கினார். இதற்கு ரூ.10 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதம் உள்ள ரூ.10 லட்சத்தை விரைவில் தருவதாக கூறினார். ஆனால், கூறியபடி மீதித் தொகையை தரவில்லை. இந்த தொகையை தர பலமுறை வற்புறுத்தியும், அந்தோணிராஜ் தரவில்லை. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் செட்டிபாளை யம் போலீஸார் அந்தோணிராஜ் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அந்தோணிராஜ் செட்டிபாளையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தை துவக்கி உள்ளார். போலீஸார் வழக்குப்பதிந்ததை தொடர்ந்து அந்தோணிராஜ் நிறு வனத்தை மூடிவிட்டு தலைமறை வாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசா ரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்