அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அலங்காநல்லூரில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அலங்காநல்லூரில் ஜனவரி 17-ல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா நிறைவடைந்த நிலையில், 12-ல் காளைகளுக்கான  பதிவும், 13-ல் மாடுபிடி வீரர்களுக்கான பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் தரப்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆகவே, அனைவரையும் இணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் அதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வழக்கு மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, காலை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விழாக்குழுவின் எண்ணிக்கை 24-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

7 mins ago

சுற்றுச்சூழல்

11 mins ago

தமிழகம்

20 mins ago

உலகம்

28 mins ago

தமிழகம்

42 mins ago

க்ரைம்

48 mins ago

தமிழகம்

37 mins ago

கல்வி

45 mins ago

உலகம்

56 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மேலும்