ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் முறையீடு: உயர் நீதிமன்றம் இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் நேற்று முறை யீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவரான கோகுல் என்பவர் சார்பில் அவரது தந்தை ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தனி நீதிபதி டி.ராஜா, ‘ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு எதிரான வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதி களைக் கொண்ட அமர்வில் நிலுவை யில் உள்ளது. இந்தச் சூழலில் நான் இந்த மனுவை விசாரிக்க முடி யாது’ என்றார்.

அதையடுத்து மனுதாரர் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதையேற்று இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, இதுதொடர்பாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் முறையிடலாம் என அனுமதியளித்தார்.

அதையடுத்து மனுதாரரான கோகுல் சார்பில், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் முறையீடு செய்யப்பட் டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

24 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்