ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீஸ் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடை பெற்ற கிராமங்களுக்கு சென்ற அமெரிக்க இளைஞரிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டங்கள் நடைபெற்ற அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீர பாண்டியபுரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வெளி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து சென்றதாக நேற்று முன்தினம் போலீஸாருக்கு தகவல் கிடைத் தது.

விசாரணையில் அந்த இளை ஞர் அமெரிக்காவின் கலிபோர் னியா பகுதியைச் சேர்ந்த மார்க் சியல்லா(35) என்பதும், அவரை தூத்துக்குடி பனிமய மாதா கோயில் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் கார் டோசா என்பவர், கிராமங்களுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந் தது. பிரின்ஸ் கார்டோசாவை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இத்தகவல் அறிந்து ஸ்டெர் லைட் எதிர்ப்பு போராட்ட குழுவி னர் நேற்று முன்தினம் நள்ளிரவு தெற்கு கடற்கரை சாலையில் தூய பனிமய மாதா பேராலயம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து பிரின்ஸ் கார்டோசாவை போலீஸார் அதிகாலை 1 மணி யளவில் விடுவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஓட்ட லில் தங்கியிருந்த அமெரிக்கா வைச் சேர்ந்த மார்க் சியல் லாவை நேற்று காலை தூத்துக் குடி டிஎஸ்பி முகாம் அலுவலகத் துக்கு அழைத்துச் சென்று ஏடிஎஸ்பி பொன்ராம், டிஎஸ்பி பிரகாஷ் ஆகி யோர் விசாரணை மேற்கொண்ட னர். அவரிடம் இருந்த விசா, பாஸ் போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், மடிக்கணினி, கேமரா, செல் போனில் உள்ள தகவல்கள், புகைப் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை அதி காரிகள் கூறும்போது, “மார்க் சியல்லா சுற்றுலா விசா மூலம் கடந்த 27-ம் தேதி தூத்துக்குடி வந்துள்ளார். அவர், நிறுவனம் சாராத செய்தியாளராக (பிரீலேன்ஸ் செய்தியாளர்) பணி யாற்றி வருவதாகவும், ஸ்டெர் லைட் போராட்டம் தொடர்பான செய்தி கட்டுரைக்காக வந்துள்ளதா கவும் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் உண்மையா? என குடியுரிமை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்