நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: கமல் பேட்டி

By செய்திப்பிரிவு

மக்கள் நீதிமய்யமும் தானும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதிமய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடந்தது. இதில் கமல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட கமல் செய்தியாளர்களிடம் பேசும்போது நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும், தானும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வரும்போது அதுகுறித்து தானும் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

காங்கிரஸுடன் கூட்டணி குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என கமல் தெரிவித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் அமீர் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார். கமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

நல்ல வழியில் நல்ல கூட்டணி ஒன்று அமையும். ஏற்கெனவே சொன்னதுபோல் ஒத்த கருத்துள்ள கட்சியுடன் கூட்டணி அமையும். அதாவது தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயலும் கட்சியுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அதற்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு குழு அமைக்கப்படும். அதன் தலைமைப் பொறுப்பு டாக்டர் மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலுக்கு வராத பிரதமர் ஜனவரி மாதம் பேரணிக்காக தமிழகத்துக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்தலுக்கான முன்னேற்பாடாகத்தான் பார்க்கிறேன்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.  

 

 

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

23 mins ago

க்ரைம்

29 mins ago

க்ரைம்

38 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்