இன்று உலக மாற்றுத்துறனாளிகள் தினம்: அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மனநிறைவோடு வாழுங்கள் - முதல்வர் பழனிசாமி வாழ்த்து

By செய்திப்பிரிவு

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

4 சதவீத இட ஒதுக்கீடு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர் களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற அதிமுக அரசு அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலை யில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், பேருந்து பயணச் சலுகை, குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்த அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வருமான உச்ச வரம்பின்றி அரசின் மருத்துவக் காப்பீடு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பாதிப்பு சதவீதம் 45 சதவீதமாக குறைப்பு ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மன வளர்ச்சி குன்றிய, தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந் திர உதவித் தொகை ரூ. 1,500 ஆக உயர்வு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தின்கீழ் 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம், பசுமை வீடுகள் திட்டத்தில் 3 சதவீத ஒதுக்கீடு, ஓய் வூதிய திட்டத்துக்கான குறைந்த பட்ச வயது 18 ஆக குறைப்பு, குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை வழங்க ஏற்பாடு, இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மனவள ஆதார மையம், சென்னை சாலைகளில் 150 இடங்களில் குரல் ஒழிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது என மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் அறிந்து, பயன்படுத்தி மன நிறைவோடு வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

;

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்