எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்துக்கு இன்றும், நாளையும் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சேவை மையங்கள் பற்றிய விவரங்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வெழுதி தோல்வியடைந்த தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை சேவை மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்