ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளார் என்ற ஸ்டாலின் முன்னெடுப்பை மம்தா, இடது சாரிகள் எதிர்த்தனரா? - வீரப்ப மொய்லி பதில்

By பிடிஐ

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்ததை மம்தா பானர்ஜியும், இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்கவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

 

டிசம்பர் 16ம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலைத்திறப்பு நிகழ்ச்சியை அடுத்து பேசிய தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர், மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சியைத் தோற்கடிப்பார் ராகுல் காந்தி என்று பேசினார்.

 

இதற்கு மற்ற எதிர்க்கட்சிகள், மம்தா பானர்ஜி, இடது சாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி  கூறும்போது, “இவையெல்லாம் தவறான செய்திகள். மம்தா கூறியது என்னவெனில் பிரதமர் வேட்பாளரை அறிவிக இது சரியான தருணமல்ல என்பதே. இதைத்தான் மம்தா கூறினார். அவர்கள் ராகுல் காந்தியை ஒன்றும் எதிர்க்கவில்லை.

 

பத்திரிகைகள்தான் எதிர்த்ததாக திரித்துச் செய்திகள் வெளியிட்டன.  நீங்களாக ஏன் முடிவு கட்டுகிறீர்கள். அவர்கள் (மம்தா, இடதுசாரிகள்) எந்த முடிந்த முடிவுக்கும் இன்னும் வரவில்லை.

 

விவசாயிகள் கடன் தள்ளுபடி விஷயத்தில் காங்கிரஸ் வெறும் வாய்ப்பேச்சுத்தான் என்கிறார் மோடி, ஆனால் அவரோ கடன் தள்ளுபடிதான் தன் அமைச்சரவையின்  முதல் திட்டம் என்று கூறினார், ஆனால் அந்த வாக்குறுதி பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. மாறாக காங்கிரஸ் வாக்குறுதிகளை காப்பாற்றியே வந்துள்ளது.

 

2008-09-ல் 13 கோடி விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடன்களை காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தள்ளுபடி செய்தது. வங்கிகளுக்கு கடன் தொகை செலுத்தப்பட்டது இதனால் விவசாயிகள் வீழ்ச்சியடையவில்லை.

 

மேலும், ராஜஸ்தான், ம.பி., சத்திஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது, வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு காங்கிரஸுக்குத்தான் உண்டு” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்