கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்?- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

கருணாநிதி சிலை திறப்பு விழா வில் கலந்து கொள்ளாதது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கொடைக்கானலில் கஜா புய லால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கமல்ஹாசன் இன்று பார்வையிடு கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை விமானத்தில் மதுரை சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கட்சிப் பணிக்காகவும், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டதில் பார்க்க முடியாமல் போன கிராமங்களை பார்வையிடவும் செல்கிறேன். கருணாநிதி சிலை திறப்பு விழா வுக்கான அழைப்பிதழ் வந்தது. விழாவில் நான் கலந்து கொள்ள வில்லை.

விழாவுக்கு வருவதாகவும் சொல்லவில்லை. கருணாநிதி மீது எனக்குள்ள மரியாதையை நான் மீண்டும் ஆதாரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் யாராவது சிலை திறப்பு விழாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

‘கஜா’ புயலால் பாதித்த கிராமங் களை பார்வையிட வருவதாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். எனக்காக நிறைய பேர் காத்தி ருக்கின்றனர். எனவே, நான் அங்கு செல்ல வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வரு கிறது. எங்களுக்கு நியாயம் என்று படுவதையும், மக்களுக்கு நல்லது என்று படுவதையும் செய்வோம். பலரின் விருப்பத்துக்கு எதையும் செய்ய மாட்டோம். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

எந்த அரசாக இருந்தாலும், மக்களை மதிக்கத் தெரிய வேண்டும். அதைச் செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். மக்களை காக்க வேண்டும் என்று வரும்போது அழுத்தமான சில முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்