அடுத்த ஆண்டு 32 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும்: ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தகவல்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு 32 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் கூறினார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவன் விண் வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்பு அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது:

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றி கரமாக குறித்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள் ளது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி. அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது, 35 நாளில் விண்ணில் செலுத்தப்பட் டுள்ள 3-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். அதி லுள்ள சோலார் பேனல்கள் விரிந்து செயல்படத் தொடங்கியுள்ளன.

செயற்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் பணி வியாழக்கிழமை (இன்று) காலை மேற்கொள்ளப்படும். இந்த செயற் கைகோளிலும், அதை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி ராக்கெட் டிலும் கூடுதல் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டன. தற்போதைய வெற்றியானது இஸ்ரோவுக்கு அதிக பொறுப்புணர்வையும் இன் னும் பல திட்டங்களை வெற்றி கரமாக செயல்படுத்த வேண்டும் என்ற உந்துதலையும் அளித்துள் ளது. நம் நாட்டின் செயற்கை கோள்கள் தேவையை இஸ்ரோ நிறைவேற்றும். அடுத்த ஆண்டு 32 விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சிவன் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, ஜிஎஸ் எல்வி எஃப்-11 ராக்கெட் திட்ட இயக்குநர் என்.பி.கிரி, ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் திட்ட இயக் குநர் பங்கஜ் கில்லெடர், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.சோமநாத், சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாண்டி யன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்கு நர் பி.குன்னிகிருஷ்ணன், விண் வெளி பயன்பாட்டு மைய இயக்குநர் டி.கே.தாஸ், மகேந்திரகிரி திரவ எரிபொருள் ஆய்வு மைய இயக் குநர் வி.நாராயணன், இஸ்ரோ திரவ எரிபொருள் வளாக இயக்குநர் டி.மூக்கையா உள்ளிட்ட விஞ்ஞானி கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்