ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை; சுகாதாரத் துறை செயலருக்கு ஆணையம் சம்மன்: 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ் ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலா உறவினர்கள், அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதா வீட்டில் வேலை செய்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற் போது இறுதிக்கட்ட விசாரணையில் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணனுக்கு விசா ரணை ஆணையம் சம்மன் அனுப் பியுள்ளது. வரும் 17-ம் தேதிக் குள் ஆணையத்தில் நேரில் ஆஜ ராகி, ஜெயலலிதா மரணம் தொடர் பாக தெரிந்த தகவல்களை தெரிவிக் கும்படி சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் எடுக் கப்பட்டதா என்பது குறித்தும் ராதாகிருஷ்ணனிடம் கேள்விகள் கேட்கப்படலாம் என்று கூறப்படு கிறது. ராதாகிருஷ்ணன் தற்போது கஜா புயல் பாதிப்பு பணிகளில் இருப்பதால், 17-ம் தேதிக்குள் ஒரு நாளில் ஆஜராக சம்மன் அனுப் பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணனை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் ஆணையம் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படு கிறது.

பாதுகாப்பு அதிகாரி ஆஜர்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள் சாமியை விசாரிக்க ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அவர் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்ததால், வேறோரு நாளில் ஆஜராக அனு மதிக்கும்படி மனு தாக்கல் செய் திருந்தார். இந்நிலையில், இன்று (11-ம் தேதி) அவர் ஆஜராக ஆறு முகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்தும், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலி தாவின் பாதுகாப்பு அதிகாரி களின் பணிகள் குறித்தும் பெருமாள் சாமியிடம் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்