புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பிறகே சென்னை செல்வேன்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக் கும் மின்சாரம் கிடைத்த பிறகே சென்னைக்கு செல்வேன் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, கோவில்பட்டி யில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்களை நேற்று வழங்கிய அமைச்சர், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது: பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கும் போது அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டியது அமைச்சரின் கடமை. மக்களின் கோரிக்கைகளை முடிந்த அளவுக்கு அரசு மூலம் செய்து கொடுக்க வேண்டும். முடிய வில்லை என்றால் அதுதொடர்பாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின்போது என்னு டைய காரை யாரும் மறிக்க வில்லை.

மாவட்டத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் 3 நாட்களுக்குள் மின் விநியோகம் செய்யப்படும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்ததை உறுதி செய்த பிறகுதான் நான் சென்னைக்கு செல்வேன்.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பணியாற்றிய பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத உழைப்பே காரணம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்