ரூ. 3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கு: பெண் உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், காந்திரோடு பகுதி யைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக் குச் சொந்தமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிலம் நந்தம்பாக்கத்தில் உள்ளது. அதை சிலர் ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரேமா புகார் தெரிவித்தார்.

அதன்படி, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடியில் ஈடுபட்டது எண்ணூர் பார்வதி, திருவொற்றியூர் காலடிப் பேட்டை பிரேம்குமார் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் ஏற்கெனவே திருநின்றவூரைச் சேர்ந்த முருகையா என்பவருக்குச் சொந்தமான ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்திருந்தை போலீஸார் கண்டுபிடித்தனர். கைதான இருவ ரையும் நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

35 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

58 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்