உதகை அருகே அரசுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு

By செய்திப்பிரிவு

மாணவர்களுக்கு நாட்டுப்பற்று, வீரத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக உதகை அருகே நஞ்சநாடு அரசுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் லட்சுமணன், முதுகலை ஆசிரியர் ஜே.என்.அர்ஜுனன், நல்லாசிரியர் விருது பெற்ற கே.எம்.லிங்கன், முன்னாள் ஆய்வக உதவியாளர் ஜீ.நித்யானந்தன் ஆகியோர் தங்கள் செலவில் 6 அடி உயர விவேகானந்தர் சிலையை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த சிலை, சென்னை அருகே மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டது. கல்வித் துறை அனுமதி வழங்கியதும், சிலை அமைப்பதற்கான பீடத்தை பொதுப்பணித் துறையினர் கட்டினர்.

சிலையை, ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த துறவியும், கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தின் தலைமை அறங்காவலரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான சுவாமி கௌதமானந்தாஜீ மஹராஜ், திறந்து வைத்தார். பள்ளித் தலைமையாசிரியர் என்.அர்ஜுனன், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விழாவை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. படுகர் இன மக்களின் பாரம்பரிய அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்