காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலு வலகத்தில் சிசிடிவி கேமராக் களுக்கான காவல் கட்டுப்பாட்டு அறையை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வாகனங் களை கண்காணித்து குற்றச் சம் பவங்களை குறைப்பதற்காகவும் வண்டலூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை கண்காணிப் பதற்காகவும் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கண்ட பகுதிகளில் 137 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப் பதற்காக மாவட்ட எஸ்பி அலுவல கத்தில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டது.

இந்த காவல் கட்டுப்பாட்டு அறை யின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, பணியின் போது உயிரிழந்த காவல் ஆய்வா ளர்கள், அலுவலர்களின் வாரிசு களான 27 பேருக்கு, மாவட்ட வருவாய்த் துறையில் பணி வழங்குவதற்கான, பணி ஆணை களை டிஜிபி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, வேலூர் மாவட்ட டிஐஜி வனிதா, மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி, வேலூர் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாகராஜன், ஏராளமான போலீஸார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

உலகம்

31 mins ago

வாழ்வியல்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்