விபத்தில் பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு: மாணவர்களின் ஜாமீனுக்கு தடை 

By செய்திப்பிரிவு

சென்னை சேத்துப்பட்டில் கடந்த அக். 16-ம் தேதி இருசக்கர வாகனத் தில் சென்ற பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது அவ்வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அவர் சிகிச்சை பலனின்றி அக்.23-ல் இறந்தார். விபத்து ஏற் படுத்தியதாக தனியார் கல்லூரி மாணவர்களான மதன், கரண் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இரு வருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சுனந்தாவின் கணவர் சுரேந்தர் நாயர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கை போலீஸார் முறை யாக விசாரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக்கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப் பட்ட மனு மீதான விசாரணை ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், இவர்களை ஜாமீனில் விடு வித்தால் வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவர். எனவே, அவர் களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, இருவருக்கும் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீ னுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

8 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

29 mins ago

தொழில்நுட்பம்

34 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்