புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய மக்களை மீட்க உதவிய மனிதநேய கரங்கள்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டியெடுத்த கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி, செய்வதறியாது திகைத்திருந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்களின் செயல் மகத்தானது என்கின்றனர் பாதிப் பிலிருந்து மீண்டுவரும் மக்கள்.

கஜா புயலின் அதி தீவிர தாக்குதலுக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் நிலைகுலைந்தன. நவ.16-ம் தேதி அதிகாலையில் நிலம் தெளிந்தது, இரவு முழுவதும் உக்கிரமாக சுழற்றியடித்த காற்றும் குறைந்தது. வீடுகளையும் முகாம்களையும் விட்டு வெளியே வந்த மக்கள், தங்களின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே அழிந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர்.

இயற்கையின் கோரத் தாக்கு தலுக்கு ஆளானதால் புயலுக்குப் பிறகு மக்கள் உணவின்றி, மாற்று உடையின்றி தவித்தனர். மின்சாரம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு சேவை முழுவதுமாக தடைபட்டதால் சொல்லொணா துயரத்துக்கு மக்கள் ஆளாகினர். ஏழை முதல் பணக்காரர் வரை அவரவர் நிலைக்கு ஏற்ப சிரமங்களைச் சந்தித்தனர்.

சற்றும் எதிர்பாராத வகையி லான இத்தகைய பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் அரசு மும் முரமாக களம் இறங்கியது. அமைச்சர்களின் உத்தரவின்பேரில், ஐஏஎஸ் அலுவலர்களின் கண் காணிப்பில் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான அலுவலர்கள், பணியாளர்கள் வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்தும் மின்பணியாளர்கள் வந்து உதவினர்.

அதேசமயம் உணவின்றி, உடை யின்றி, தங்க இடமின்றித் தவித்த மக்களுக்குத் தேவையான உதவி களைத் தன்னார்வலர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தன்னார் வலர்களின் உதவிக்கரங்கள் புதுக் கோட்டை மாவட்ட மக்களுக்காக நீண்டன.

ஆயிரக்கணக்கான வாகனங் களில் உணவுப் பொருட்கள், உடைகள் என அவரவருக்கு ஏற்ப நிவாரண பொருட்களை ஏற்றி வந்து, பாதிக்கப்பட்ட மக் களை நேரில் சந்தித்து வழங்கினர். சிலர், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கியிருந்து சமைத்து, வயிறார உணவளித்தனர்.

சுட்டிக்காட்டிய ‘இந்து தமிழ்'

சிலரோ, மிகவும் பாதிக்கப்பட்டு, குடிசையில் வசிப்போரை இர விலும் தேடிச் சென்று தங்களை யாரென்றுகூட அறிமுகம் செய்து கொள்ளாமல் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டு சென் றனர். ‘இந்து தமிழ்’ சுட்டிக் காட்டிய குக்கிராம மக்களுக்கு அரசு அலு வலர்கள் மட்டுமின்றி தன்னார் வலர்களும் உதவி செய்தனர்.

அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என நிவாரண உதவி செய்ததில் யாரும் விதி விலக்கல்ல. பலரும் உதவிய தோடு மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது, அரசு சக்கரத்தின் சுழற்சியை வேகப்படுத்தியது.

இவ்வாறு வெளியூர்களில் இருந்து நேரில் கொண்டு வந்தவர் கள் தவிர, இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பலர் குழுக்களாக செயல்பட்டு, பிற பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தனர். பாதிக்கப்பட்ட வீடு களின் மேற்கூரையாகக் காணப் படும் தார்ப்பாய்களில் பெரும் பாலானவை நிவாரணமாக கொடுக்கப்பட்டவையே. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் தன்னார்வலர்கள் செய்த உதவி தான் புயலில் சிக்கித் தவித்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மீள்வதற்கு உதவிகரமாக இருந் தது.

சாதி, மதங்களைக் கடந்து எங்கிருந்தோ வந்து, முகம், முகவரி தெரியாதவர்கள், கதறிய வர்களின் கண்ணீர் துடைத்து, கரம்பிடித்து செய்த மனிதநேய மிக்க உதவியைப் பெற்ற புதுக் கோட்டை மாவட்ட மக்கள் ஒரு போதும் உதவிக்கரங்களை மறக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவோர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்