பிரதமருடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண் டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடி வெடுக்க மாநில அரசுக்கு அதி காரம் இருப்பதாக உச்ச நீதிமன் றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுவிப் பது தொடர்பான பரிந்து ரையை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணை யம் சமீபத்தில் அனுமதி அளித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ள தமிழக அரசு, உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளது. மேலும், நேற்று முன்தினம் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மேகே தாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பி வைத் துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பிற்பகல் 2 மணிக்கு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி னார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், 7 பேர் விடுதலை, மேகேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஆளுநர் சென்னை திரும்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்