காலாப்பட்டு மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி(22) என்ற வாலிபரை திருட்டு வழக்கில் புதுச்சேரி பாகூர் போலீஸார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஜெயமூர்த்தி உயிரிழந்தார். பாகூர் போலீஸார் தாக்கியதன் காரணமாக ஜெயமூர்த்தி உயிரிழந்தார் என்று கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாகூர் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், துணை உதவி ஆய்வாளர் திருமால் ஆகியோர் சஸ்பெண்டு செய்யபட்டனர்.

இந்த நிலையில் ஜெயமூர்த்தி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்