திமுகவுடன் கூட்டணியா?: கமல் பதில்

By செய்திப்பிரிவு

கமலின் மக்கள் நீதிமய்யம் திமுகவுடன் கூட்டு, இரண்டு எம்பி சீட்டு என தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியாக உடனடியாக கமல் அதை மறுத்துள்ளார்.

நடிகர் கமல் மக்கள் நீதிமய்யம் என்கிற அரசியல் கட்சியைத்தொடங்கி நடத்தி வருகிறார். ஊழலை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவுடன் நெருக்கம் காட்டிய அவரை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு திமுக அவரை அழைக்கவில்லை கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக இதுவரை ஒரு அங்கீகாரம் அளிக்கவில்லை.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அணி உருவாகி வருகிறது. இதில் மக்கள் நீதிமய்யம் இணைகிறது 2 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியானது.

இதற்கு உடனடியாக கமல் தனது ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் மக்கள் நீதிமய்யம் ஆரம்பித்த நோக்கம் தெரியும், குறுகிய ஆதாயத்துக்காக அல்ல வதந்திகளை நம்பாதீர்கள், உந்துதல் ஏற்பட்டால் தனித்து நிற்போம் என தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.  #நாளை நமதே”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்