மாணவர்கள் மோதிக் கொள்வதை தடுக்க போலீஸார் புது வியூகம்: மோதலில் ஈடுபடுபவர்களின் பெயர், புகைப்படத்தை கல்லூரி வளாக நோட்டீஸ் போர்டில் ஒட்ட முடிவு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னையில் மாணவர்கள் மோதிக்கொள்வதை தடுக்க, மோதலில் ஈடுபடும் மாணவர் களின் பெயர், முகவரியுடன் அவர்களது புகைப்படத்தையும் கல்லூரி வளாகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்ட போலீஸார் முடிவு செய் துள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாண வர்களுக்குள் தங்களில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி மோதல் கள் நடக்கின்றன. போலீஸார் அவர்களை கைது செய்தபோதி லும் இந்த மோதல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் பாரிமுனையில் இருந்து காரணோடை சென்ற மாநரக அரசு பேருந்தில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்கள் முன்பக்க, பின்பக்க வாசல் படிக்கட்டில் தொங்கிய வாறு கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்க விட்டபடி சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக வண்ணாரப் பேட்டை போலீஸார் மாநில கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் மாநில கல்லூரிக்குச் சென்று "மாணவர்கள் நல்ல விஷயங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். எதிரிக்கும் அன்பு காட்டுங்கள்" என அறிவுரை கூறினார். அதைத் தொடர்ந்து சில நாட்கள் மாணவர்கள் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை.

இந்நிலையில் ஆவடி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாநில கல்லூரி மாணவர் முகேஷ் (21) என்பவரை பச்சையப்பன் கல் லூரி மாணவர்கள் 3 பேர் அரிவாளால் வெட்டினர். அவர் களை போலீஸார் கைது செய் தனர். இந்நிலையில், மாணவர் கள் தொடர்ந்து மோதலில் ஈடுபடு வதை தடுக்க தற்போது போலீ ஸார் புது வியூகம் ஒன்றை வைத்துள்ளனர்.

அதன்படி மோதலில் ஈடுபடும் மாணவர் பெயர், வயது, எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற முழு விவரத்தையும் சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்ட முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் மோதலை தடுக்க முடியும் என போலீஸார் நம்புகின்றனர்.

விழிப்புணர்வு பிரசுரம்

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "எந்த மாணவர் குற்றச் செய லில் ஈடுபடுகிறார் என அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் சம்பந்தப்பட்ட மாண வர்களின் விபரம் முழுவதையும் கல்லூரி வளாகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற மாணவர்களுக்கு நாம் செய்யும் தவறு தெரிந்து விடும் என்ற எண்ணத்தில் மாண வர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பார்கள் என நம்புகிறோம். இது ஒரு உளவியல் சார்ந்த அணுகுமுறை" என்றனர்.

குற்ற வழக்குகளில் சிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை மட்டுமின்றி தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களில் கூட வேலை கிடைக்காத நிலை ஏற்படும். எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் வைக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

21 mins ago

சுற்றுலா

41 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்