பூத்துக் குலுங்கும் செந்நிறப் பூக்கள்: சுற்றுலா பயணிகளைக் கவரும் மலேயன் ஆப்பிள் மரம்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் உள்ள ஆப்பிள் மரத்தில் செந்நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால், இந்த ஆண்டு ஆப்பிள் பழங்களின் மகசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான தட்பவெப்ப நிலை காரணமாக 1900-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசு தோட்டக்கலை பழப் பண்ணை தொடங்கப்பட்டது.

கண்ணைக் கவரும் மலர்கள்

இங்கு துரியன், வெண்ணெய் பழம், லிட்சி, மங்குஸ்தான், ரம்புட் டான், சிங்கப்பூர் பலா என பல் வேறு அரிய வகை மரங்கள் வளர்கின்றன. தற்போது இங்குள்ள மலேயன் ஆப்பிள் மரங்களில் கண்ணைக் கவரும் செந்நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இப்பூக்களில் உள்ள தேனை அருந்த ஏராளமான தேன் சிட்டு கள் இந்த மரங்களை சுற்றிச் சுற்றி வருகின்றன. அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இப்பூக்கள், ஆயிரக்கணக்கில் பூத்துள்ளதால், சுமார் நூறடி உயரம் கொண்ட மலேயன் ஆப்பிள் மரங்கள் காண் போரை வியக்கச் செய்கின்றன.

விளைச்சல் அதிகரிக்கும்

இந்த ஆண்டு போதிய அளவில் பருவமழை பெய்துள்ள தால், அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளதாகவும், இதனால் ஆப்பிள் விளைச் சல் அதிகரிக்கும் எனவும் தோட் டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆப்பிள் மரத்தில் பூத்துள்ள பூக்களின் அழகைக் காண, கல்லார் அரசு தோட்டக் கலை பழப் பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்