பேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.2.47 லட்சத்தை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை மாநகரப் பேருந்தில் பயணி தவறிவிட்ட ரூ.2.47 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநரை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த ‘தடம் எண் 114’ பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் கடந்த 17-ம் தேதி மாலை பணியில் இருந்தனர். அன்று இரவு 11 மணி அளவில் பேருந்தில் யாரோ ஒரு பயணி தவறவிட்டுச் சென்ற ரூ.2.47 லட்சம் ரொக்கத்தை திருமங்கலம் காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்தனர்.

குடியரசு தினத்தில் கவுரவிப்பு

நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்றிய அவர்கள் இருவரையும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பல்லவன் இல்லத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். பரிசு வழங்கியும் கவுரவித்தார். 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவிலும் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

44 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்