காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

சென்னை

காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த தொகையை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த வழக்கு 5 ஆயிரத்து 29 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன், காலதாமதமாக வழக்கை தாக்கல் செய்த பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தொகையை கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்த்து அந்த ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதன்பிறகு காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் வழக்கை உயர் நீதிமன்ற பதிவுத்துறை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

8 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

57 mins ago

ஆன்மிகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்