மீஞ்சூர் அருகே கம்பால் தாக்கி செல்போன் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழப்பு: 2 சிறுவர்களை ரயில்வே போலீஸ் கைது செய்து விசாரணை

By செய்திப்பிரிவு

மீஞ்சூர் அருகே விரைவு ரயிலில் பயணியிடம் நடந்த செல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார். இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தீஸ்வரதாஸ்(44). இவர், கடந்த வாரம், வேலை தேடு வதற்காக, ஹவுராவில் இருந்து, சென்னைக்கு, கொரமண்டல் விரைவு ரயிலில் வந்து கொண்டிருந் தார். அந்த விரைவு ரயில், கடந்த 9-ம் தேதி மாலை, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ரயில் நிலையம் அருகே மிக மெதுவாக வந்து கொண்டிருந் தது.

அப்போது, படிக்கட்டு அருகே பயணம் செய்து கொண்டிருந்த சித்தீஸ்வரதாஸின் செல்போனை தண்டவாளத்தில் நின்று கொண்டி ருந்த 2 சிறுவர்கள் பெரிய கம்பால் தாக்கி பறித்தனர். இதனால், நிலை தடுமாறிய சித்தீஸ்வரதாஸ், ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே, அந்த சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தில் பலத்த காய மடைந்த சித்தீஸ்வரதாஸ் மீட்கப் பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுய நினைவு இல்லாத நிலையில் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏற்கெனவே, செல் போன் பறிப்பு மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்த கொருக்குப் பேட்டை ரயில்வே போலீஸார், கடந்த 11-ம் தேதி, 13-ம் தேதி ஆகிய நாட்களில், நந்தியம்பாக்கம், பொன் னேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதே ஆன இரு சிறுவர்களை கைது செய்த னர். சித்தீஸ்வரதாஸ் இறந்ததை யடுத்து, அந்த வழக்கை ஆதாய கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறிப்பு சம்பவத்தின் போது, சித்தீஸ்வரதாஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவம், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சம்பவங்கள்

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப் பூண்டி ரயில் மார்க்கத்தில், மீஞ்சூர், நந்தியம்பாக்கம், கொருக்கு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் சார ரயில்கள், விரைவு ரயில்கள் மெதுவாக செல்லும்போது, ரயில் பயணிகளிடம் நகை, பணம், செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

தற்போது நடந்துள்ள செல் போன் பறிப்பு சம்பவம், ஒரு உயிரையே பறித்துள்ளது. ஆகவே, சென்னை சென்ட்ரல்- கும்மிடிப் பூண்டி ரயில் மார்க்கத்தில், மீஞ்சூர், நந்தியம்பாக்கம், கொருக்கு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த, ரயில்வே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்