புயல் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை யில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழு, நியாயமான முறையில் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், மத் தியக் குழு ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆய்வு நடத்துகிறது. இதனால் மற்ற பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ள ரூ. 15 ஆயிரம் கோடி போதுமானதல்ல. அதிக நிதி பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

புயல் சேதங்களைப் பார்வை யிட பிரதமர் நரேந்திர மோடி இன் னும் வரவில்லை. தற்போது அவர் இந்தியாவில் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என் பது தெரியவில்லை. ஒருவேளை வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கும் போது வந்தாலும் வரலாம்.

கடந்த காலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இந்த முறையாவது தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.புயல் சேதங்களைப் பார்வையிட பிரதமர் மோடி இன்னும் வரவில்லை. தற்போது அவர் இந்தியாவில் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்