நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் கார் மோதி மரணம்: சிறுவன் படுகாயம், கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் கைது

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், நீர்மூளையில் கார் மோதியதில் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகில் உள்ள நீர்மூளை காலனித் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி அமுதா(50), சிவக்குமார் மனைவி சுமதி(35), செல்வராஜ் மனைவி ராஜகுமாரி(40), ராம மூர்த்தி மனைவி சரோஜா(35), ராமமூர்த்தியின் மகன் மணி கண்டன்(15). கஜா புயலால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனை வரும் நீர்மூளையில் அமைக்கப் பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கி இருந்தனர்.

இவர்கள் நிவாரண பொருள் களை பெறுவதற்காக திருத் துறைப்பூண்டி - நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்தனர். அப்போது நிவாரணப் பொருள்கள் கொண்டுவருவதாக நினைத்து, கேரளாவில் இருந்து நாகூர் செல்வதற்காக வந்த ஒரு காரை மறிக்க முயன்றனர். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், காரை மறித்தவர்களின் மீது மோதியது.

இதில் அமுதா, சுமதி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜகுமாரி, சரோஜா, மணிகண்டன் ஆகியோரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜகுமாரியும், சரோஜாவும் இறந்தனர்.

இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மணிகண்டன், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீர்மூளை பகுதியைச் சேர்ந்த வர்கள் விபத்தை ஏற்படுத்திய காரையும், ஓட்டுநரையும் தலை ஞாயிறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நோபல்(29) என்பவரை கைது செய்தனர். விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சுற்றுலா

37 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்