அரபிக் கடலில் புயல் சின்னம் எதிரொலி; 400 விசைப்படகுகள் கரை திரும்பின: 8-ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் வலுவடைந்துள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட துறை முகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அவசரமாக நேற்று கரை திரும்பின.

கன்னியாகுமரி மாவட்டம் முட் டம், குளச்சல், தேங்காய்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து, விசைப்படகுகளில், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, மஹாராஷ்டிரா பகுதி ஆழ்கட லுக்கு செல்லும் மீனவர்கள் 40 நாட்களுக்கு மேல் வரை கடலுக் குள் தங்கியிருந்து மீன்பிடி பணி யில் ஈடுபடுவர்.

புயல் எச்சரிக்கை எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் விசைப் படகுகள் கரைதிரும்பிய வண்ணம் உள்ளன. குளச்சல் மீன்பிடி துறை முகத்தில் நேற்று மட்டும் 35 விசைப்படகுகள் அவசர அவசர மாக கரைதிரும்பின.

இதுபோல், கேரள மாநிலம் கொச்சி, லட்சத்தீவு உட்பட பல பகுதிகளில் இருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நேற்று கரைதிரும்பியதாக மீன்வளத் துறையினர் தெரிவித்த னர்.

பாதிப்புக்கு வாய்ப்பு

இதுகுறித்து மீன்வளத் துறையி னர் கூறியதாவது:

அரபிக்கடலில் உருவாகும் புய லால் கேரளா, லட்சத்தீவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் பெரும் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது.

இங்கு குமரி மீனவர்களின் விசைப்படகுகளே அதிகம் மீன் பிடித்து வருகின்றன. ஒக்கி புயலின் போது மீனவர்களுக்கு நிகழ்ந்தது போல், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முன்னெச் சரிக்கையாக விசைப்படகு மீனவர் கள் அனைவரையும் கரை திருப் பும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றோம். இவ்வாறு மீன்வளத் துறை யினர் கூறினர்.

8-ம் தேதி வரை

இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறியதாவது: மீனவர்கள் 8-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண் டாம். அவசர உதவிக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்