ரன்வீர்ஷா, கிரண் ராவ் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சிலைகளை வாங்கியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சிலைகள், கல்தூண்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் எப்போது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் சான்றிதழ்களையும் ரன்வீர் ஷாவும் கிரண் ராவும் நாளை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து மாயமான புராதன மற்றும் பழமையான சிலை கள் குறித்தும் சிலைகள் செய்யப் பட்டதில் நடந்த முறைகேடு குறித் தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரன்வீர் ஷாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களிலும் பெண் தொழி லதிபர் கிரண்ராவ் வீட்டில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட் டிருந்த சிலைகள் என மொத்தம் 267 சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டன.

மனுவை ஏற்காத போலீஸார்

இதுகுறித்து விசாிப்பதற்கு ஆஜ ராகுமாறு கிரண் ராவ் மற்றும் அவரது மேலாளர் தயாநிதி, ஊழி யர் செந்தில் உட்பட 12 பேருக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்ம னில் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் அக்.9 ( நேற்று ) அன்று ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் தரப்பி னர் ஆஜராக வேண்டுமென குறிப் பிடப்பட்டு இருந்தது. ஆனால் கிரண்ராவின் வழக்கறிஞர்கள், "கும்பகோணம் அலுவலகம் தொலைவில் உள்ளதால், எங்க ளிடம் சென்னையில் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி மனுக்களை வழங்க வந்தனர். ஆனால் சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் கும்ப கோணம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள் ளது. எனவே, அவர்கள் இங்கு தான் ஆஜராக வேண்டும். நீங்கள் வழங்கும் மனுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என வழக்கறி ஞர்களிடம் கூறி, அவர்களை டிஎஸ்பி சுந்தரம் திருப்பி அனுப்பி னார்.

நீதிபதிகள் கேள்வி

இந்நிலையில் ரன்வீர் ஷா மற் றும் கிரண் ராவ் ஆகியோர் தங்க ளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசா ரணை நேற்று நீதிபதிகள் ஆர்.மகா தேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, சிலை கடத் தல் வழக்கில் ஏற்கெனவே கைதான முக்கிய குற்றவாளியான தீனதயா ளன் என்பவருக்கும் தங்களது மனு தாரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பழங்கால பொருட் களின் மீதான ஆசையினால் கடந்த 1993-ம் ஆண்டு முதல் இவற்றை மனுதாரர்கள் சேகரித்து வருவ தாகவும் இந்த பொருட்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாக தொல்லியல் துறையிடமிருந்து முறையான சான்றிதழ் பெற்றுள்ள தாகவும் அவர்களது வழக்கறிஞர் கள் தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘கடந்த 1993-ம் ஆண்டு வாங்கியதாக கூறப் படும் சிலைகளுக்கு 10 ஆண்டு களுக்கு முன்பாக சான்றிதழ் பெற் றது ஏன், இந்த பழங்காலப் பொருட் கள் எப்போது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதற்கான ஆதா ரங்களையும் சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய வேண்டும்‘ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (அக்.11) தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

7 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

13 mins ago

ஆன்மிகம்

23 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்